காலிஃப்ளவர் – 1 சிறியது
தக்காளி – 50 கிராம்
வெங்காயம் – 1 கைப்பிடி (பொடியாக நறுக்கியது)
உப்பு – தேவையான அளவு
பூண்டு – 8 பல்லு
இஞ்சி – சிறிய தூண்டு
ப.மிளகாய் – 4
மிளகு – 4 ஸ்பூன்
தனியா தூள் – 2 ஸ்பூன்
கொத்தமல்லி, கறிவேப்பிலை – சிறிதளவு
தாளிக்க :
கறிவேப்பிலை
பட்டை
சோம்பு
செய்முறை :
* தக்காளியை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
* காலிஃப்ளவரை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
* வெந்நீரில் உப்பு போட்டு அதில் காலிஃப்ளவரை போட்டு வைக்கவும்.
* மிளகை மிக்சியில் போட்டு கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
* இஞ்சி, பூண்டை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்
* கடாயில் எண்ணெய் ஊற்றி சோம்பு போட்டு வெடித்ததும் பட்டை, கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.
* பின்னர் வெங்காயம் போட்டு நன்கு வதக்கவும்.
* பொடியாக நறுக்கிய இஞ்சி, பூண்டை போடவும்.
* அடுத்து ப.மிளகாய், தக்காளி போட்டு நன்கு வதக்கவும்.
* காலிஃப்ளவர், தேவையான அளவு உப்பு சிறிது தண்ணீர் சேர்த்து 5 நிமிடம் நன்றாக வேக விடவும்.
* காலிஃப்ளவர் வெந்தவுடன் தனியா தூள், மிளகு தூள் சேர்த்து நன்கு கிளறி கொத்தமல்லி, கறிவேப்பிலை போட்டு இறக்கவும்.
* இந்த காலிஃப்ளவர் மிளகு பிரட்டல் கீரை சாதம், தயிர் சாதம், பருப்பு ரசத்துடன் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.