காவிரிக்காக மாரியம்மன் கோவிலில் தீமிதித்த தமிழக முன்னாள் அமைச்சர்

காவிரிக்காக மாரியம்மன் கோவிலில் தீமிதித்த தமிழக முன்னாள் அமைச்சர்

சுப்ரீம் கோர்ட் உத்தரவின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திட வேண்டும் என்று வலியுறுத்தி தமிழக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மாரியம்மன் கோவிலில் தீமிதித்தார். 

முன்னாள் போக்கவரத்து துறை அமைச்சரும், டிடிவி தினகரன் தொடங்கியுள்ள அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் அமைப்பு செயலாளராகவும் இருக்கும் செந்தில் பாலாஜி கரூா் மாவட்டம் தளவாபாளையம் மாரியம்மன்  கோவிலில் நேற்று தீமிதித்தார்

 மத்திய அரசு உடனடியாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்றும்,. ஈ.பி.எஸ்., ஓ.பி.எஸ். வசம் உள்ள அ.தி.மு.க., இரட்டை இலை உள்ளிட்டவை டிடிவி தினகரனுக்கு கிடைக்க வேண்டும் என்றும் அவர் வேண்டிக் கொண்டதாக தெரிகிறது.

ஏற்கனவே செந்தில்பாலாஜி முன்னாள் முதல்வா் ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் சிறைக்கு சென்றிருந்த போது அவா் விரைவில் விடுதலையாக வேண்டும் என்று வேண்டிக்கொண்டு கரூா் பசுபதீஸ்பரா் கோவிலில் ஆயிரக்கணக்கான அகல் விளக்குகளை கொண்டு அதில் அம்மா என்று எழுதி  வேண்டுதல் செய்தார் என்பது தெரிந்ததே

Leave a Reply