போராட்டம் வேண்டாம், உரிய தண்ணீர் கிடைக்கும்: தமிழக மக்களுக்கு உச்சநீதிமன்ற நீதிபதி வேண்டுகோள்
காவிர் போராடம் தமிழகத்தில் நாளுக்கு நாள் வலுத்து கொண்டே வரும் நிலையில் தமிழக மக்கள் அமைதி காக்க வேண்டும் என உச்சநீதிமன்ற நீதிபதி கேட்டுக்கொண்டுள்ளார்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தமிழகம் முழுதும் ரெயில் மற்றும் சாலை மறியல் போராட்டங்கள் தொடர்ச்சியாக நடந்து வருகிறது.
இந்நிலையில், தமிழக அரசு வழக்கறிஞர் உமாபதி, வழக்கு ஒன்று தொடர்பாக தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அமர்வு முன்பு ஆஜரானார். அப்போது தமிழகத்தில் நடைபெறும் போராட்டங்கள் குறித்து தலைமை நீதிபதி கேட்டார்.
‘தமிழகத்தில் என்னதான் நடக்கிறது? ஏன் அனைத்து இடங்களிலும் போராட்டம் நடக்கிறது? மக்களும் தமிழக கட்சிகளும் போராட்டத்தை கைவிட வேண்டும். தமிழகத்தில் இயல்பு நிலை திரும்பி, அமைதியை நிலைநாட்ட வேண்டும். வரும் 9-ம் தேதி காவிரி தொடர்பான வழக்கு விசாரணைக்கு வரும். அன்றைய தினம் உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும். தமிழகத்திற்கு தேவையான தண்ணீர் பெற்று தரப்படும்’ என தெரிவித்தார்.