டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வு வழக்கில் முக்கிய உத்தரவு!

தமிழகத்தில் நடைபெற்ற டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக வழக்கு தொடரப்பட்டது என்பது தெரிந்ததே

இந்த வழக்கின் விசாரணை இன்று நடைபெற்றபோது இந்த வழக்கு தொடர்பாக 118 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக டி.என்.பி.எஸ்.சி. தரப்பு அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

கடந்த 2016ஆம் ஆண்டில் டி.என்.பி.எஸ்.சி. சார்பில் நடத்தப்பட்ட குரூப் 4 தேர்வில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக தொடரப்பட்ட வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர்

இந்த நிலையில் இந்த வழக்கு தீர்ப்பு தேதியை குறிப்பிடாமல் வழக்கை ஒத்திவைத்தது உயர் நீதிமன்ற மதுரைக்கிளை என்பதும் குறிப்பிடத்தக்கது.