கைது செய்யப்பட்ட மேற்குவங்க முன்னாள் டிஜிபிக்கு திடீர் நெஞ்சுவலி. பெரும் பரபரப்பு

saradhaமேற்கு வங்காளத்தில் பல கிளைகளாக செயல்பட்டு வந்த சாரதா சிட்பண்ட் என்ற நிதி நிறுவனம் பொதுமக்களிடம் இருந்து பல ஆயிரம் கோடி மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு அதன் நிறுவனத்தலைவர் சுதிப்தா சென் காஷ்மீரில் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். அவருடைய சொத்துக்களும் முடக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த மோசடிக்கு உடந்தையாக இருந்ததாக குற்றம் சாட்டப்பட்ட மேற்குவங்க முன்னாள் டிஜிபி ரஜத் மஜும்தார் நேற்று அதிரடியாக சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். மேலும் திரிணாமல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பலரை கைது செய்ய சிபிஐ தீவிர முயற்சி செய்து வருகிறது. இதனால் மேற்குவங்கத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நேற்று கைது செய்யப்பட்ட முன்னாள் டிஜிபியிடம் விசாரணை நடத்திய சிபிஐ போலீஸார் இன்று அவரை கொல்கத்தா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ள நிலையில் திடீரென அவர் தனக்கு நெஞ்சுவலி வந்ததாக கூறியதால் அவரை கொல்கத்தா மருத்துவமனையில் சிபிஐ அனுமதித்துள்ளனர். தற்போது அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த வழக்கில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியையும் விசாரணை செய்ய சிபிஐ திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

Leave a Reply