லண்டன் சென்ற சிபிஐ அதிகாரிகள். விஜய் மல்லையாவுடன் வருவார்களா?
இந்திய வங்கிகளில் ரூ.9000 கோடி கடன் வாங்கிவிட்டு அதை திருப்பி செலுத்தாமல் லண்டனில் தலைமறைவாக வாழ்ந்து வரும் பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா சமீபத்தில் லண்டனில் கைதாகி ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். அவரை இந்தியாவுக்கு அழைத்து வந்து விசாரணை செய்ய சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் லண்டன் சென்றுள்ளனர்.
லண்டன் சென்றுள்ள சிபிஐ அதிகாரிகள் பிரிட்டன் அரசு அதிகாரிகளுடன் விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு அழைத்து செல்வது குறித்த சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் பற்றி ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
சி.பி.ஐ கூடுதல் இயக்குநர் ராகேஷ் அஸ்தானா தலைமையிலான 4 பேர் கொண்ட இந்த குழுவினர் தொடர்ந்து பிரிட்டன் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், இந்த பேச்சுவார்த்தை வெற்றி அடைந்தால் அவர்கள் விஜய் மல்லையாவுடன் திரும்பி வருவார்கள் என்று சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.