ஆ.ராசா வீட்டில் சிபிஐ திடீர் சோதனை. 6 கிலோ தங்கம், 20 கிலோ வெள்ளி பறிமுதல்
திமுகவை சேர்ந்த முன்னாள் மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் ஆ.ராசாவின் வீடு மற்றும் அலுவலகங்களில் ஒரே நேரத்தில் நடத்திய சோதனையின்போது 6 கிலோ தங்கம் மற்றும் 20 கிலோ வெள்ளி பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக சி.பி.ஐ. தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
2ஜி அலைக்கற்றை ஏலத்தில் முறைகேடு செய்ததாக முன்னாள் தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் ஆ.ராசா உள்ளிட்டோர் மீது சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில், நேற்று ஆ.ராசா வீடு, அலுவலகம் மற்றும் அவரது சகோதரர் , நண்பர் சாதிக்பாட்சா ஆகியோர் வீடுகளில் சி.பி.ஐ. அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். ஒரே நேரத்தில் டெல்லி, சென்னை, பெரம்பலூர், அரியலூர் உள்பட மொத்தம் 20 இடங்களில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த சோதனைக்கு பின்னர் ஆ.ராசா மற்றும் அவரது சகோதரர் உள்பட் 17 பேர் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக சி.பி.ஐ. அதிகாரிகள் புதிய வழக்கு ஒன்றாஇ பதிவு செய்தனர்.
இந்த சோதனை குறித்து சி.பி.ஐ. அதிகாரிகள் இன்று செய்தியாளர்களிடம் கூறியபோது, ”ஆ.ராசா உள்ளிட்டோர் வீடுகளில் நடத்திய சோதனையில் 6 கிலோ தங்கம் மற்றும் மேலும், 20 கிலோ வெள்ளி, வங்கிக் கணக்கு, நிரந்தர வைப்பு நிதி ஆவணங்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டிருக்கிறது. இவற்றின் மதிப்பு கணக்கிடும் பணி நடந்து வருகிறது என்று கூறினர்