என்.டி.டி.வி பிரணாய் வீட்டில் சிபிஐ ரெய்டு
இந்தியாவின் பிரபல ஊடகங்களில் ஒன்றான என்.டி.டி.வி நிறுவனத்தின் இணைநிறுவனர் பிரணாய் ராய் வீட்டில் இன்று சிபிஐ அதிரடியாக சோதனை செய்து வருகின்றது.
இதுகுறித்த தகவல் வெளியானதும் தேசிய ஊடகங்கள் அனைத்தும் பிரணாய் ராய் வீட்டு வாசலில் குவிந்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே சிபிஐ, பிரணாய் ராய் மற்றும் அவரது மனைவி ராதிகா ராய் ஆகியோர் மீது வழக்கு ஒன்று பதிவு செய்துள்ளது. தனியார் வங்கி ஒன்றில் மிகப்பெரிய தொகை ஒன்றை லோன் பெற்ற பிரணாய் நிறுவனம் அதை முறைகேடாக பயன்படுத்தியதாக வழக்கு தொடரப்பட்டதாகவும், இதுகுறித்து விசாரணை செய்வதற்கே ரெய்டு செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது. ஆனாலும் இந்த செய்தி உறுதி செய்யப்படவில்லை.