மூன்றரை வருட ஜெயில் தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்யும் லாலுபிரசாத் யாதவ்
பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் அவர்களுக்கு கால்நடை ஊழல் வழக்கில் நேற்று அறிவிக்கப்பட்ட மூன்றரை வருட சிறைத்தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்யவுள்ளதாக அவரது மகன் தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார்.
பீகார் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சராக இருந்தவர் லாலு பிரசாத் யாதவ். அவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட கால்நடை தீவன ஊழல் வழக்கில் அவருக்கு 3.5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.5 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது. இந்த சூழலில் நீதிமன்றம் தனது கடமையை செய்ய தவறிவிட்டதாக லாலுவின் மகன் தேஜஸ்வி குற்றம்சாட்டியுள்ளார். இந்த வழக்கே தனது தந்தை மீது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று கூறிய தேஜஸ்வி யாதவ், இந்த வழக்கில் பாஜகவும், நிதிஷ்குமாரும் சதிசெய்துள்ளதாக குறிப்பிட்டார்.
மேலும் நீதியின் மீது தங்களுக்கு நம்பிக்கை இருப்பதாகவும், தீர்ப்பின் நகல் கிடைத்தவுடன் தீர்ப்பிற்கு எதிராக மேல் முறையீடு செய்வோம் என்றும் கூறினார்.