முதல்கட்ட நுழைவுத்தேர்வை எழுதாதவர்கள் இந்த ஆண்டு எம்.பி.பி.எஸ் படிக்க முடியாது. அதிகாரிகள் அறிவிப்பு

முதல்கட்ட நுழைவுத்தேர்வை எழுதாதவர்கள் இந்த ஆண்டு எம்.பி.பி.எஸ் படிக்க முடியாது. அதிகாரிகள் அறிவிப்பு

entranceநேற்று முன் தினம், மத்திய இடைநிலை கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ) எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கான முதல்கட்ட தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு நடந்தது. இந்த தேர்வு இந்தியா முழுவதும் 52 நகரங்களில் 1040 மையங்களில் சுமார் 6 லட்சம் மாணவர்கள் எழுதினார்கள். தமிழகத்தில் மட்டும் 22,750 பேர் இந்த தேர்வை எழுதினர். ஆனால் நுழைவுத்தேர்வு இந்த வருடம் உண்டா? இல்லையா? என்ற குழப்பத்தின் காரணமாகவும் பல்வேறு பல்வேறு காரணங்களும் 3250 மாணவர்கள் இந்த தேர்வை எழுதவில்லை.

இந்நிலையில் இரண்டாவது கட்ட நுழைவுத்தேர்வு வரும் ஜூலை 24ஆம் தேதி நடைபெற இருப்பினும், இந்த 3250 பேர்களும் இந்த ஆண்டுக்கான எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிக்க முடியாத நிலை உருவாகி உள்ளதாக சி.பி.எஸ்.இ அதிகாரிகள் கூறியுள்ளனர். இதுகுறித்து அவர்கள் மேலும் கூறியதாவது:

கடந்த மாதம் 28-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவின்படி நாடு முழுவதும் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ் படிப்புகளுக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு என்ற ஒரே நுழைவுத் தேர்வு மூலமாகவே மாணவர் சேர்க்கை நடத்த முடிவு செய்யப்பட்டது.

அதன்படி மே 1ஆம் தேதி அகில இந்திய மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்பு நுழைவுத் தேர்வை, முதல் கட்ட தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வாக மாற்றி நடத்தப்பட்டது.

அந்த தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் தகுதித் தேர்வை கண்டிப்பாக எழுத வேண்டும். தேர்வை தவற விட்டால் ஜூலை 24-ந் தேதி நடைபெறும் இரண்டாம் கட்ட தேர்வை எழுத முடியாது. முதல் கட்ட தேர்வுக்கு விண்ணப்பிக்காதவர்கள் மட்டுமே இரண்டாம் கட்ட தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியும் என்று அறிவித்து இருந்தோம்.

ஆனாலும் 8 சதவீத மாணவர்கள் முதல்கட்ட தேர்வு எழுதவில்லை. தேர்வு எழுதாக மாணவர்கள் இந்த ஆண்டு எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்பு படிக்க முடியாது. 2 கட்ட தேர்வு முடிவுகளையும் ஆகஸ்ட் 17-ந் தேதி வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Leave a Reply