எல்லையில் அத்துமீறிய பாகிஸ்தானிற்கு, இந்திய வீரர்கள் தக்க பதிலடி கொடுத்தனர்.
ஜம்மு காஷ்மீர் மாநில எல்லையில் பாகிஸ்தான் எல்லைத் தாண்டிய பயங்கரவாதத்தை தொடர்ந்து வருகிறது. அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய ராணுவமும் செயல்பட்டு வருகிறது. இதற்கிடையில் இரு நாடுகளும் பல்வேறு சமயங்களில் அமைதி பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தன. ஆனால் தொடர் தீவிரவாத தாக்குதல்களால் அவை நிறுத்தப்பட்டன. அதனால் இனி அமைதி பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பே இல்லை என்று கூறும் அளவிற்கு இருநாடுகளும் செயல்பட்டு வருகின்றன.
இந்நிலையில் நேற்று நள்ளிரவு நவ்ஷேரா கட்டுப்பாட்டு பகுதிக்கு அருகே உள்ள பாபா கோரியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி தாக்குதல் நடத்தி உள்ளனர். சிறிய ரக ஆயுதங்களைப் பயன்படுத்தினர். இதையடுத்து இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்தது. போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி வருவதற்கு மத்திய அரசு தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருகிறது.