அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் இருந்து செயல்பட்டு வரும் ஏ.எல்.எஸ் என்ற நரம்பு நோய் விழிப்புணர்வு அமைப்பு ஒன்று சமீபத்தில் ஐஸ் பக்கெட் குளியல் ஒன்றை ஆரம்பித்து வைத்தது. இதன்படி ஒருவர் பக்கெட் நிறைய உள்ள ஐஸ் தண்ணீரால் குளிக்கும் சவாலை ஏற்க வேண்டும். பின்னர் அவர் மூன்று பேர்களை இந்த சவாலுக்கு அழைக்க வேண்டும். அவ்வாறு சவாலை ஏற்காதவர்கள் 100 அமெரிக்க டாலர் அந்த அமைப்புக்கு நிதி வழங்க வேண்டும்.
இந்த ஐஸ் பக்கெட் சவாலை பிரபல கோல்ப் வீரர் சார்லஸ் கென்னடி என்பவர் கடந்த ஜுலை மாதம் 15ஆம் தேதி ஆரம்பித்து வைத்தார். பின்னர் இது உலகில் உள்ள பிரபலங்களிடையே படுவேகமாக பரவி தற்போது கோலிவுட், பாலிவுட் நடிகர்களையும் இந்த ஐஸ் பக்கெட் குளியல் சவால் பிடித்துக்கொண்டது.
[embedplusvideo height=”400″ width=”600″ editlink=”http://bit.ly/1wg9cD0″ standard=”http://www.youtube.com/v/JxO3n829Ak4?fs=1″ vars=”ytid=JxO3n829Ak4&width=600&height=400&start=&stop=&rs=w&hd=0&autoplay=0&react=1&chapters=¬es=” id=”ep4896″ /] பிரபல தமிழ் நடிகை ஹன்சிகா, பாலிவுட் நடிகர்கள் அபிஷேக் பச்சன், ரித்தேஷ் தேஷ்முக், பிபாஷாபாசு, மற்றும் சானியா மிர்சா ஆகியோர் இந்த ஐஸ் பக்கெட் சவாலை ஏற்று குளித்துள்ளனர்.மேலும் அமெரிக்க அதிபர் ஒபாமா, முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ், பிரபல பங்குச்சந்தை வர்த்தகர் வாரன் பப்பெட், பேஸ்புக் நிறுவனர் மார்க், மைக்ரோ சாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் ஆகிய வி.வி.ஐ.பிக்களும் இந்த ஐஸ் பக்கெட் குளியலை குளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.