விளம்பரத்தில் நடிக்கும் பிரபலங்களுக்கு 5 ஆண்டு ஜெயில். அதிர்ச்சியில் நடிகர்கள்
போலியான பொருட்களின் விளம்பரத்தில் பிரபலங்கள் நடிப்பதால் அதை நம்பி கோடிக்கணக்கானோர் ஏமாற்றம் அடைந்து வருகின்றனர். இதை தவிர்ப்பதற்காகவும், பிரபலங்களுக்கு பொறுப்புணர்வை உண்டாக்கவும் கடுமையான சட்டப்பிரிவுகள் உருவாக்கப்பட்டுள்ளது.
இதன்படி மத்திய நுகர்வோர் நலத்துறை அமைச்சகம் ஒரு வரைவு மசோதாவை உருவாக்கி உள்ளது. இந்த மசோதாவின்படி போலியான பொருட்களின் விளம்பரங்களில் நடிப்பதன் மூலம், முதல்முறை தவறு செய்யும் பிரபலங்களுக்கு ரூ.10 லட்சம் அபராதமும், 2 ஆண்டுவரை ஜெயில் தண்டனையும் விதிக்கப்படும். இரண்டாவது தடவை தவறு செய்தால், ரூ.5 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.50 லட்சம் அபராதமும் விதிக்கப்படும். கலப்படம் செய்பவர்களுக்கும் இதே ஜெயில் தண்டனை, அபராதத்துடன் உரிமமும் ரத்து செய்யப்படும்.
இந்த வரைவு மசோதா பற்றி மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தலைமையிலான மந்திரிகள் குழு இன்று கூடி ஆலோசனை நடத்தவுள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த மசோதா காரணமாக விளம்பரத்தில் நடித்து வரும் நடிகர், நடிகைகள் அதிர்ச்சியில் இருப்பதாக கூறப்படுகிறது.