மொபைல் போன் கட்டணங்கள் 10 மடங்கு உயர்கிறது: அதிர்ச்சி தகவல்

மொபைல் போன் கட்டணங்கள் 10 மடங்கு உயர்கிறது: அதிர்ச்சி தகவல்

வாடிக்கையாளர்களுக்கு செல்போன் கட்டணங்களை நிர்ணயிப்பது குறித்து அந்தந்த நிறுவனங்களே முடிவு செய்து கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்ததை அடுத்து தொலைத்தொடர்புத் துறையினர் போட்டியின் காரணமாக கட்டணங்களை வெகுவாக குறைத்தன. சில நிறுவனங்கள் இலவச சேவையை வழங்கி வந்தன என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இந்தத் துறையில் ஏற்பட்டுள்ள சரிவு காரணமாக கட்டண விவகாரத்தில் அரசு தலையிட வேண்டும் என ஒரு சில தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார் இந்த வேண்டுகோளை அடுத்து இதனை பரிசீலித்த நிதி ஆயோக் தலைமை செயல் அதிகாரி அமிதாப் கான் என்பவர் கூறியபோது கூறியதாவது:

தொலைபேசி அழைப்புகள் மற்றும் ‘மொபைல் டேட்டா’க்களுக்கு, தொலைபேசி நிறுவனங்கள், குறைந்தபட்ச அடிப்படை விலை நிர்ணயம் செய்து கொள்ள அனுமதி அளிப்பதை தவிர, வேறு வழியில்லை’ என, தெரிவித்தார். இதையடுத்து, தொலைபேசி கட்டணங்கள், தற்போதைய விலையை விட, 5 முதல் 10 மடங்கு விலை உயர வாய்ப்புள்ளது என எதிர்பார்க்கப்படுகிறது

Leave a Reply