மாணவ ,மாணவிகளுக்கு செல்பொன் வேண்டாம். ஆசிரியர்கள் அறிவுரை

cellphoneவேலூர் மாவட்டத்தில் 11 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதற்கு ஒரு செல்போனே முக்கிய காரணமாக இருந்துள்ளது. சிறுமியை கொலை செய்த மாணவர் செல்போனில் ஆபாச படம் பார்த்து மாணவியை கொலை செய்ததாக மாணவர் ஒப்புக்கொண்டார்.

இந்நிலையில் வேலூர் மாவட்டத்தில் பள்ளிகளில் மாணவர்கள், மாணவிகள் மற்றும் பெற்றோர்களுக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர்கள், தாளாளர்கள், முதல்வர்கள் ஆகியோர் அடங்கிய குழு பெற்றோர்களுக்கு அறிவுரை வழங்கி உள்ளனர். அந்த அறிவுரையில் உள்ள அம்சங்கள் பின்வருமாறு:

பள்ளியில் படிக்கும் மாணவிகள் பள்ளிக்கு எப்படி வருகின்றனர். வீட்டில் இருந்து பள்ளிக்கு எவ்வளவு தூரம் உள்ளது என்று விசாரித்து, பஸ்சில் வந்து சென்றால் வீட்டுக்கு செல்லும் வழி எப்படி உள்ளது. தனியாக செல்ல கூடாது என்று மாணவிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும் வீடுகளுக்கு செல்லும்போதும், வரும்போதும் வேறு யாருடனும் செல்ல கூடாது. எவரிடமும் பேசக்கூடாது.

அதேபோன்று பெற்றோர்களிடமும் மாணவிகளுடன் தாய் அல்லது தந்தை உடன் வரவேண்டும். மாணவிகள் மற்ற ஆண்களுடன் பேசவோ, பழகவோ கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளுக்கு வெளியில் பாதுகாப்பாக செல்வது குறித்து அறிவுரைகள் வழங்க வேண்டும். செல்போன், லேப்–டாப் ஆகியவற்றை மாணவர்களிடம் கொடுக்கக்கூடாது.

அப்படியே அவர்களிடம் இருந்தாலும் அதனை அவர்கள் வைத்து என்ன செய்கின்றனர் என்பதை அடிக்கடி கண்காணிக்க வேண்டும். அவ்வப்போது பள்ளிக்கு வரும் மாணவ–மாணவிகளுடன் பெற்றோர்கள் வந்து செல்ல வேண்டும். தவறாக நடக்கும் மாணவர்களை பெற்றோர்களே கண்டிக்க வேண்டும்.

இவ்வாறு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.

மேலும் பல பள்ளிகளில் தினமும் 5 நிமிடம் தியான வகுப்புகளும், நீதிபோதனை வகுப்புகளும் தொடங்கப்பட்டுள்ளன.

Leave a Reply