தகவல் தொழில்நுட்பம், தகவல் பரிமாற்ற வளர்ச்சியில் நகர்ப்புறங்களில் செல்போன்டவர்கள் அமைப்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு நகரிலும் சாதாரணமாகவே குறைந்தபட்சம் 50 டவர்கள் காணப்படுகிறது. மாநகர பகுதிகளில் 100க்கும் மேற்பட்டவை அமைக்கப்படுகின்றன. ஏற்கனவே செல்போன் டவர்கள் வருகையால் சிட்டுக்குருவிகள், வண்ணத்துப் பூச்சிகள் அழிந்து விட்டதாக இயற்கை ஆர்வலர்களிடம் பரவலான குற்றச்சாட்டு உண்டு. இதற்கு காரணமே செல்போன் டவர்களில் வெளிப்படும் கதிர்வீச்சு தான். டவர்களில் ஏறி போராட்டம் நடத்துபவர்களை இந்த கதிர் வீச்சு பாதிக்காத என்ற கேள்வியும் எழுகிறது. ஆனால் உடனடி பாதிப்பு இல்லை என்றாலும் காலப்போக்கில் அதன் தாக்கம் இருக்கும் என்கின்றனர் அறிவியலாளர்கள்.
இதுகுறித்து தனியார் கல்லூரியின் எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் துறைத் தலைவர் சுகன்யா கூறுகையில், ‘‘ செல்போன் டவர்களின் தன்மை ஒவ்வொரு நாடுகளுக்கும் வேறுபடுகிறது. இதுடவரில் இந்து வெளிப்படும் கதிர் வீச்சு, அமையக்கூடிய இடம், பயன்பாட்டு தொலைவு பொறுத்து வேறுபடும். கதிர்வீச்சு என்றழைக்கப்படும் ரேடியேசன் வாட்ஸ் அலகில் கணக்கிடப்படுகிறது. மனித உடலில் இயல்பாகவே மின்காந்த சக்தி உள்ளது. இது வெறும் 10 ஹெட்ஸ் அளவில் உள்ளது. 10 லட்சம் ஹெட்ஸ் ஒரு மெகா ஹெட்ஸ் என அளவிடப்படுகிறது. தற்போது இந்தியாவில் அமைக்கப் பட்டுள்ள ெசல் போன் டவர்கள், 1,900 மெகா ஹட்ஸ் அளவுக்கு கதிர்வீச்சை வெளிப்படுத்தக்கூடியவை. இவை அதிகபட்சமாக ஒரு கிலோ மீட்டர் அளவிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என சில ஆய்வு முடிவுகள் தெரிவித்துள்ளது. செல்போன் டவரில் ஏறி இறங்குவோர்க்கு நாள்பட நாள் பட ேலசான தலைவலி முதல் புற்றுநோய் பாதிப்பு வரை ஏற்பட வாய்ப்புள்ளது,’’ என்றார். செல்போன் டவரில் ஒரு முறை ஏறும் போது, அதிலிருந்து வரும் கதிர்வீச்சால் பாதிப்பு குறைவு தான் என்ற போதிலும், பிற உடல் நலபிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே டவர் ஏறும் முன், அவரவர் உடல் நிலையையும் கருத்தில் கொள்ள வேண்டும் என எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள்.
இது குறித்து அரசு மருத்துவர் ஒருவர் கூறியதாவது: பொதுவாக செல்போன் டவர்களில் இருந்து வெளியேறும் கதிர்வீச்சினால் உடல் பாதிப்பு ஏற்படும். தோல் வியாதி, புற்றுநோய், நரம்பு பாதிப்பு ஆகியவை ஏற்படவாய்ப்புள்ளது. செல்போன் டவரில் பழுதுபார்க்கும் ஊழியர்கள் அடிக்கடி டவரில் ஏறி வேலை செய்கின்றனர். அப்போது, கதிர்வீச்சு ஏற்படுவதை தடுக்க, இயக்கத்தை நிறுத்தி விட்டுதான் பணியாற்றவேண்டும். ஆனால் அவற்றை செயல்படுத்தினால், பல்வேறு நடைமுறை சிக்கல் ஏற்படும். இதனால் எந்த ஊழியரும் இவற்றை செய்வதில்லை. ரத்த அழுத்தம், இருதயம் சம்பந்தபட்ட நோய்கள் உள்ளவர்களின் நிலைமை இதற்கு தலைகீழாகும். உயரமான இடத்திற்கு செல்வதால் அவர்களுக்கு கூடுதல் பயம் உண்டாகி, படபடப்பு ஏற்படும். இந்த படபடப்பால், ரத்த அழுத்தம் அதிக மாகி மயக்கம் ஏற்பட வாய்ப்புண்டு.
இதனால் ஒரு சிலசமயங்களில் மாரடைப்பு கூட ஏற்பட வாய்ப்புள்ளது. சமீபத்தில் போராட்டத்தின் போது உயிரிழந்த சசிபெருமாளின் சாவிற்கு இது கூட ஒரு காரணமாக இருக்கலாம். அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டவுடன் நுரையீரலில் நீர் கசிந்து ரத்த வாந்தியாக ெவளியேறியுள்ளதாக ெதரிகிறது. உயரத்தில் இருப்பதால், வயிற்று பிரச்னை இருந்தாலும் குடல் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. தற்போது டவர் ஏறி போராட்டம் நடத்துபவர்கள் முழு ஆரோக்கியத்துடன் இருப்பார்கள் என கூறமுடியாது. இவர்களுக்கு பின்விளைவுகளால் ஏற்படும் பாதிப்பு பற்றி தெரியாததால் தான் இத்தகைய விபரீதத்தை தேடி செல்கின்றனர். இவற்றை அவர்களாகவே உணர்ந்தால், யாரும் செல்போன் ஏறி போராட்டம் நடத்த மாட்டார்கள். இவ்வாறு அரசு மருத்துவர் தெரிவித்தார்