வீடுகளில் இருந்து திடீரென வெளியேறிய சிமெட்ன் கலவை: மெட்ரோ பணி காரணமா?
சென்னையில் கடந்த சில வருடங்களாக மெட்ரோ ரயில் ரயில் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணியின் காரணமாக திடீர் திடீரென சாலைகளில் பள்ளம், கட்டிடங்களில் விரிசல், திடீரென குவியும் மண்குவியல், என ஆங்காங்கே பல சம்பவங்கள் நடந்து வருகின்றன,.
இந்த நிலையில் நேற்று பழைய வண்ணாரப்பேட்டை தங்கசாலை மேம்பாலம் பகுதியில் சுரங்கப்பாதை தோண்டும் பணி நடந்தது. அப்போது ராயபுரம் கல்லறை சாலை பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து திடீரென சிமெண்ட் கலவை வெளியேறியது. இதனால் அந்த பகுதியில் உள்ள மக்கள் அச்சமடைந்தனர்
சுமார் 2 அடி உயரத்துக்கு வெளியேறிய இந்த சிமெண்ட் கலவை வீட்டில் இருந்து வெளியேறு சாலை வரை வெளியேறியது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் மெட்ரோ ஊழியர்கள் வந்து கழிவை அகற்றும் முயற்சியில் ஈடுபட்டனர்.
இந்த மாதிரி சிமெண்ட் கலவை வெளியேறுவது இது முதல் முறையல்ல. ஏற்கனவே இதேப்போல வண்ணாரப்பேட்டைப் பகுதியில் சிமெண்ட் கலவை வெளியேறியது. தற்போது மீண்டும் வெளியேறியுள்ளதால் அந்த பகுதியே பரபரப்பு அடைந்துள்ளது.