கோலா நிறுவனத்தின் கைப்பாவையா சென்சார்? பரபரப்பு தகவல்
கோகொ கோலாவின் தீமைகள் குறித்து அவ்வப்போது விழிப்புணர்ச்சிகள் மக்களிடையே ஏற்படுத்தி வரும் நிலையில் இதுகுறித்த ஆவணப்படம் ஒன்றுக்கு சென்சார் சான்றிதழ் மறுக்கப்பட்டுள்ளது. எனவே சென்சார் கோலா நிறுவனத்திற்கு ஆதரவாக செயல்படுவதாக சமூக வலைத்தளங்களில் குற்றஞ்சாட்டப்பட்டு வருகிறது.
கடந்த 2004ஆம் ஆண்டு உத்தரபிரதேச மாநிலத்தில் கோலா நிறுவனம் 2 ஆலைகளை நிறுவி உள்ளது. இந்த ஆலைகளுக்கு அப்பகுதிகள் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து கடந்த 10 வருடங்களாக போராட்டம் நடத்தி வருகிறார்கள். நிலத்தடி நீரை இந்நிறுவனம் அதிகப்படியாக உறிஞ்சி வருவதால் நீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் இந்த பகுதியில் வறட்சி ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் இதுகுறித்து சமூக செயற்பாட்டாளரும், ஆவணப்பட இயக்குனருமான ஜரானா ஜாவேரி ஒரு ஆவணப்படத்தை இயக்கி இருக்கிறார். ‘சார்லியும், கோகோ-கோலா கம்பெனியும்’ என்கிற அந்த ஆவணப்படத்தில், அந்த நிறுவனம் இந்தியாவில் எவ்வாறு செயல்படுகிறது, அதன் தயாரிப்பு முறை எப்படி என்பதோடு, அவர்கள் குளிர்பானத்தில் பூச்சிகொல்லி மருந்துகளை கலப்பதையும் ஆதார்வம்பூர்வமாக நிரூபித்து இருக்கிறார். அதோடு அவர்கள் குளிர்பானத்தை எவ்வாறு சந்தைப்படுத்துகிறார்கள் என்பதையும் விளக்கி இருக்கிறார். தனது ஆவணப்படத்தை தணிக்கைக்கு சமர்பித்து இருக்கிறார்.
ஆனால் இந்த படத்திற்கு சென்சார் சான்று அளிக்க மறுத்துள்ளது. இந்த ஆவணப்படம் இளைஞர்களை தவறாக வழிநடத்தும் என்றும், தவறான அரசியல் காரணங்களை கற்பிக்கிறது என்றும் சொல்லப்பட்டு இருக்கிறது. இதனால் இந்த படத்தின் இயக்குனர் தனது ஆதங்கத்தை ஃபேஸ்புக்கில் தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது: தணிக்கைக்குழு வேண்டுமென்றே இந்தப்படத்திற்கு சான்றிதழ் தர மறுக்கிறதோ என்று எண்ணத்தோன்றுகிறது. இந்திய திரைப்பட தணிக்கை சட்டப்படி, அரசியல் பேசும் படங்களுக்கு சான்றிதழ் தரக்கூடாது என்று எந்த விதியும் இல்லை. அப்படிப் பார்த்தால் எந்த திரைப்படமும் வெளிவரவே முடியாது’ என்று சொல்லி இருக்கிறார். அதோடு, குஜராத் சம்பவத்தை அடிப்படையாக வைத்து தான் இயக்கிய ஆவணப்படம் தணிக்கை அதிகாரிகளால் எத்தனை விமர்சனத்திற்கு உள்ளானது