புலனாய்வு துறையில் உதவியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

download (4)

மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் புலனாய்வு துறையில் காலியாக உள்ள 69 உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்லது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Personal Assistant

காலியிடங்கள்: 69

தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் சுருக்கெழுத்தில் திறன் பெற்றிருக்க வேண்டும்.

i. டிக்டேஷன்: 10 நிமிடங்கள் @ நிமிடத்திற்கு 100 வார்த்தைகள்.

ii. கணினி-படியெடுத்தல், 40 நிமிடங்கள் (ஆங்கிலம்) மற்றும் 55 நிமிடங்கள் (இந்தி).

விரும்பப்படும் தகுதிகள்: கணினியை இயக்குவதில் திறன், மேலும், விண்டோஸ்2000/ 2003, எம்எஸ் வேர்ட், போன்ற தகுதிகள்.

சம்பளம்: மாதம் ரூ.9300  -34800 + தர ஊதியம் ரூ.4600.

வயது வரம்பு: 18 – 27க்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.50. மகளிர், எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, திறனறி தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: www.mha.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைன் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 20.02.2016

மேலும் முழுமையான விவரங்கள் அறியhttp://mha.nic.in/sites/upload_files/mha/files/DETAILEDADVERTISEMENT-2015.pdfஎன்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

Leave a Reply