ஓகி புயல் நிவாரண நிதி: கேட்டது ரூ.4047 கோடி, கிடைத்ததோ ரூ.133 கோடி

ஓகி புயல் நிவாரண நிதி: கேட்டது ரூ.4047 கோடி, கிடைத்ததோ ரூ.133 கோடி

தமிழகத்தில் உள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஏற்பட்ட ஓகி புயலால், அந்த மாவட்டமே நிலைகுலைந்து போனது. கடலுக்குள் மீன் பிடிக்க சென்ற ஏராளமான மீனவர்களின் நிலை என்ன ஆயிற்று என்று இன்னும் தெரியவில்லை

இந்த நிலையில் ஓகி புயலால் ஏராளமான பொருட்சேதம் கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் ஏற்பட்டது. எனவே பாதிக்கப்பட்ட பகுதிக்கு நிவாரணமாக மத்திய அரசு ரூ.4047 கோடி ஒதுக்க வேண்டும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மத்திய அரசிடம் கோரிக்கை வைத்திருந்தார்

இந்த நிலையில் மத்திய அரசு தமிழகத்திற்கான ஓகி புயல் இடைக்கால நிவாரண நிதியாக ரூ 133 கோடியை மட்டும் ஒதுக்கியுள்ளது. நேற்று நடைபெற்ற மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இதே போல, ஓகி புயலால் பாதிக்கப்பட்ட கேரளாவிற்கு ரூ.169.06 கோடி நிவாரணம் அளிக்க முடிவுசெய்யப்பட்டுள்ளது. மத்திய அரசின் மிகச்சிறிய நிவாரண நிதி ஒதுக்கீடு தமிழக மக்களை அதிருப்தி அடைய செய்துள்ளது.

Leave a Reply