ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளித்தது மத்திய அரசு. பட்டாசு வெடித்து மக்கள் கொண்டாட்டம்

ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளித்தது மத்திய அரசு. பட்டாசு வெடித்து மக்கள் கொண்டாட்டம்

jallikattuதமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்திருந்த நிலையில் ஜல்லிக்கட்டு நடத்த மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசியல் கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன. இந்நிலையில் ஜல்லிக்கட்டு நடத்த மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளதாக மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து டுவிட்டரில் தகவல் வெளியிட்டு உள்ள மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது. தமிழர்களின் கலாச்சார விளையாட்டிற்கு அனுமதி வழங்கி பெருமை சேர்த்த பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கும் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவதேகர் அவர்களுக்கும், குரல் கொடுத்த அனைவருக்கும் தமிழக மக்கள் சார்பாக எனது நன்றி. என்று  பொன்.ராதாகிருஷ்ணன் டுவிட்டரில் தெரிவித்து உள்ளார்.

ஜல்லிக்கட்டு போட்டிக்கு மத்திய அரசு அனுமதி வழங்கி அறிவிக்கை வெளியிட்டது. ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஏற்பாடுகளை செய்யுமாறு பிரகாஷ் ஜவதேகர் கூறிஉள்ளார். தொலைபேசியில் பேசியபோது இத்தகவலை தெரிவித்தார் என்று பொன். ராதாகிருஷ்ணன் கூறிஉள்ளார்.

இந்த ஆண்டு தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கு மத்திய அரசு அனுமதி அளித்ததுள்ளதை அடுத்து இந்த சந்தோஷத்தை மக்கள் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர்.

Chennai Today News: Central Government give approval of Jallikattu

jallikattu jallikattu palamedu jallikattu  42 people injured

Leave a Reply