டிப்ளமோ தகுதிக்கு மத்திய அரசு நிறுவனத்தில் பணி

NMDC

சத்தீஸ்கர் மாநிலம், பஸ்தாரில் செயல்பட்டு வரும் பொதுத் துறை நிறுனமான நேஷனல் மினரல் டெவலப்மென்ட் கார்ப்பரேஷன் லிமிடெட் (NMDC) நிறுவனத்தில் காலியாக பல்வேறு பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண்: 01/2015

தேதி: 08.04.2015

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

பணி: HEM (Mechanic) Gr.I (Trainee)/MCO Gr. I (Trainee)
காலியிடங்கள்: 09
தகுதி: பொறியியல் துறையில் மெக்கானிக்கல் பிரிவில் 3 வருட டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். மேலும் கனரக வாகன ஒட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Electronic Technician Gr.II (Trainee)
காலியிடங்கள்: 01
தகுதி: பொறியியல் துறையில் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் 3 வருட டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். மேலும் கனரக வாகன ஒட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: JUNIOR STENOGRAPHER GR. III (TRAINEE)
காலியிடங்கள்: 03
தகுதி: கலை, அறிவியல், வணிகவியல் போன்ற ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் லேயர் பிரிவில் ஆங்கில சுருக்கெழுத்தும் மற்றும் ஆங்கிலத்தில் ஹையர் தட்டச்சு தகுதியும் பெற்றிருக்க வேண்டும். கனரக வாகன ஒட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Assistant Physiotherapist Grade -III (Trainee) 
காலியிடங்கள்: 02
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் அறிவியல் துறையில் பட்டம், மருத்துவத் துறையில் ஆய்வக தொழில்நுட்ப பட்டயம் முடித்திருக்க வேண்டும். குறைந்தபட்சம் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Assistant Pharmacist Grade-III (Trainee)
காலியிடங்கள்: 01
தகுதி: மருத்தாளுநர் பிரிவில் டிப்ளமோ அல்லது பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Junior Assistant  Gr.III (Trainee)
காலியிடங்கள்: 13
தகுதி: கலை, அறிவியல், வணிகவியல் போன்ற ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் ஆங்கிலம் அல்லது இந்தி தட்டச்சில் நிமிடத்திற்கு 30 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 08.05.2015 தேதியின்படி 30க்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.50. இதனை Kirandul இல் மாற்றத்தக்க வகையில் Jt.G.M.(Finance), BIOM,  Kirandul  Complex,  Kirandul என்ற பெயருக்கு பாரத ஸ்டேட் வங்கியில் டி.டி.யாக எடுக்கப்படும். எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

DY.MANAGER  (PERSONNEL)R&P, 

BAILADILA  IRON  ORE  MINE,  KIRANDUL  COMPLEX,

POST.  KIRANDUL,  DIST.  SOUTH  BASTAR  DANTEWADA,  (CHATTISGARH),

PIN-494556

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 08.05.2015

மேலும் விண்ணப்பதாரர்களின் சந்தேகங்களுக்கு முழுமையான விவரங்கள் அறிய https://www.nmdc.co.in/Docs/Careers/Employ%20Noti%20English%20-1_15NEW.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Leave a Reply