மத்திய அரசு துறையில் இந்தியா முழுவதும் காலியாக உள்ள 21 உதவி இயக்குநர்கள், உதவி சட்ட ஆலோசகர், உதவி பேராசிரியர் போன்ற பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (UPSC) வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கவும்.
விளம்பர எண்: 19/2014
காலியிடங்கள்: 21
பணி: Assistant Directors (Aircraft Engineering)
காலியிடங்கள்: 11
சம்பளம்: மாதம் ரூ.15,600 – 39,100 + தர ஊதியம் ரூ.6600
தகுதி: Aeronautical Engineering பிரிவில் இரண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது சம்மந்தப்பட்ட துறையின் ஆராய்ச்சி, வடிவமைப்பு, விரிவாக்க பிரிவில் நான்கு வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 40க்குள் இருக்க வேண்டும்.
பணி: Assistant Legislative Counsel (Grade-IV of Indian Legal Service)
காலியிடங்கள்: 04
சம்பளம்: மாதம் ரூ.15600 – 39,100 + தர ஊதியம் ரூ.6600
தகுதி: சட்டத்துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 40க்குள் இருக்க வேண்டும்.
பணி: Assistant Professors (Mathematics)
காலியிடங்கள்: 02
சம்பளம்: மாதம் ரூ.15,600 – 39,100 + தர ஊதியம் ரூ.6000
தகுதி: சட்டத்துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். தேசிய தகுதி தேர்வு எனப்படும் NET தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: 25. இதனை எஸ்பிஐ வங்கியின் கிளைகளில் பணமாக செலுத்தலாம் அல்லது விசா, மாஸ்டர் கிரெடிட், டெபிட் கார்டு மூலம் செலுத்தலாம். SC,ST,PH மற்றும் பெண்களுக்கு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் http://upsconline.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 11.12.2014
ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 12.12.2014
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://upsc.gov.in/recruitment/advt/2014/Advt.%2019.pdf என்ற விளம்பர இணைப்பை பார்க்கவும்.