தற்போது கம்ப்யூட்டர் முதல் காய்கறிகள் வரை ஆன்லைனிலேயே வாங்கிக்கொள்ளும் வசதி பொதுமக்களுக்கு கிடைத்துள்ளது. ஆன்லைனில் தங்களுக்கு தேவையான பொருட்களை டிக் செய்துவிட்டு பணத்தை நெட்பேங்க் மூலம் செலுத்திவிட்டால் போது நமக்கு தேவையான பொருள் நமது வீட்டிற்கு டோர் டெலிவரியாக கிடைத்துவிடும். இந்நிலையில் இந்த ஆன்லைன் மூலம் தற்போது மருந்து பொருட்களையும் விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
ஆன்லைன் மூலம் மருந்துகளை விற்பனை செய்ய மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தற்போது ஆலோசித்து வருவதாகவும், இதற்கான திட்டத்தை தயாரிக்கும் பணியும் ஆரம்பமாகியுள்ளதாகவும், சுகாதாரத்துரை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அடுத்த மாதம் நடைபெற உள்ள மருந்து ஆலோசனை கமிட்டியின் ஆலோசனை கூட்டத்தில் இந்த திட்டம் குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக தெரிவித்த அதிகாரி, “மாறிவரும் காலச்சூழலுக்கு ஏற்ப ஆன் லைனில் மருந்து விற்பதற்கான சட்டப்பிரிவுகளை கொண்டு வருவது மற்றும் மருந்து விற்பனையை கண்காணிப்பதற்கான செயல்முறையை உருவாக்குவது அவசியம் என கருதுவதாகவும் இது தொடர்பான ஆலோசனைகளை தெரிவிக்குமாறு மாநில மருந்து ஒழுங்குமுறை ஏஜென்சிகளை த டிரக்ஸ் கண்ட்ரோலர் ஜெனரல் ஆப் இந்தியா கேட்டுக்கொண்டுள்ளளதாகவும் அந்த அதிகாரி கூறியுள்ளார்