மத்திய அரசு அளிக்கும் அத்தியாவசிய சேவைகளுக்கு ஆதார் அட்டை கட்டாயப்படுத்தி கேட்கப்படுவதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரித்த உச்ச நீதிமன்றம், அரசு அளிக்கும் எந்த சேவைக்கும் ஆதார் அட்டையை கட்டாயப்படுத்தி கேட்கக் கூடாது என்று சமீபத்தில் தீர்ப்பு அளித்தது.
காஸ் சிலிண்டர் போன்றவற்றுக்கு வழங்கப்படும் மானியத்தை, வங்கி கணக்கு மூலமாக மக்களுக்கு மத்திய அரசு இப்போது பணமாக வழங்குகிறது. இதை பெறுவதற்கு ஆதார் அடையாள அட்டையை கட்டாயமாக காட்ட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவால் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே, ஆதார் அட்டை கட்டாயமல்ல என்ற தீர்ப்பை மாற்றும்படி கோரி மத்திய அரசு மறுஆய்வு மனு தாக்கல் செய்தது. அதில், ஆனால், மத்திய அரசின் இந்த கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நேற்று நிராகரித்தது.