மத்திய அரசின் இணையதளங்கள் ஹேக் செய்யப்பட்டதா? அரசு விளக்கம்
நேற்று மாலை முதலில் மத்திய பாதுகாப்பு துறையின் இணையதளம் ஹேக் செய்யப்பட்டதாகவும், அதன் பின்னர் ஒன்றன்பின் ஒன்றாக 25 மத்திய அரசின் அதிகாரபூர்வமான இணையதளங்கள் ஹேக் செய்யப்பட்டதாகவும், இவை சீனர்களின் கைவரிசையாக இருக்கலாம் என்றும் தகவல்கள் வந்தன
இதுகுறித்து நேற்றிரவு விளக்கம் அளித்த மத்திய அரசு அதிகாரிகள், ‘பாதுகாப்புத் துறை இணையதளம் உள்பட அனைத்து இணையதளங்களும் ஹேக் செய்யப்படவில்லை. தொழில்நுட்ப பிரச்சனை மட்டுமே. உள்துறை அமைச்சக இணையதளத்தின் பாதுகாப்பு கட்டமைப்பு அப்கிரேட் செய்யப்பட்டு வருகிறது. அதன் காரணமாக தற்காலிக தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டிருக்கலாம். மேலும் ஹேக் செய்யப்பட்டதாக தகவல் வெளியானதை தொடர்ந்து, பாதுகாப்புத் துறையின் இணையதளம் தற்காலிகமாக முடக்கப்பட்டு, சரிபார்க்கப்பட்டது’ என்று தெரிவித்தனர்.
ஆனால் இதுகுறித்து மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது டுவிட்டரில், ‘இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நடக்காதவாறு சரிசெய்யப்படும் என்று தெரிவித்தார்.