தமிழக சட்ட ஒழுங்கு குறித்து ஆளுனரிடம் அறிக்கை கேட்ட மத்திய அரசு. ஆட்சி கலைப்பா?
சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் ஜல்லிக்கட்டு போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே கலவரம் ஏற்பட்டுள்ளதால் பல இடங்களில் வன்முறை, தீ வைத்தால், தடியடி ஆகியவை நடந்து வருகிறது. சென்னையில் பெரும்பாலான இடங்களில் போக்குவரத்து ஸ்தம்பித்து உள்ளதோடு, போலீஸ் நிலையம் அருகிலேயே தீ வைக்கப்பட்டுள்ளது
இந்நிலையில் தமிழகத்தில் நிலவும் சட்டம்- ஒழுங்கு நிலை குறித்து ஆளுநரிடம் மத்திய உள்துறை அமைச்சகம் அறிக்கை கேட்டிருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. இந்த அறிக்கையை வைத்தே மத்திய அரசு அடுத்தகட்ட நடவடிக்கையில் இறங்கும் என தெரிகிறது.
தமிழகத்தில் ஆட்சியை பிடிக்க காத்திருக்கும் பாஜக, ஆளுனரின் அறிக்கையை காரணம் காட்டி ஆட்சியை கலைக்குமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்