நாடு முழுவதும் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் பேங்க்

நாடு முழுவதும் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் பேங்க்

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில் மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோஜ் சின்ஹா பேசினார். அப்போது, வரும் ஏப்ரல் மாதம் முதல் நாடு முழுவதும் 650 கிளைகளுடன் ‘இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் பேங்க்’ தொடங்கப்படும்.

முன்னதாக ராய்பூர் மற்றும் ராஞ்சியில் மட்டும், கடந்த ஆண்டு ஜனவரி முதல் சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பேமெண்ட்ஸ் வங்கி சேவைக்காக, ரிசர்வ் வங்கி தபால் துறைக்கு, கடந்த ஆண்டு அனுமதி வழங்கியது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம் நாடு முழுவதும் உள்ள 1.55 லட்சம் தபால் அலுவலகங்களிலும் வங்கி சேவை அளிக்கப்பட உள்ளது.

இதனை பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் மற்றும் பஞ்சாப் மெட்லைப் நிறுவனத்துடன் இணைந்து வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வங்கிகள் 100% பொதுத்துறை நிறுவனமாக திகழும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply