நாளை மத்திய அமைச்சரவை விரிவாக்கம். தமிழகத்திற்கு புதிய அமைச்சர் கிடைப்பார்களா?

நாளை மத்திய அமைச்சரவை விரிவாக்கம். தமிழகத்திற்கு புதிய அமைச்சர் கிடைப்பார்களா?

modiபிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு பதவி ஏற்று 2 ஆண்டுகள் முடிவடைந்துள்ளது. இதனையடுத்து, மத்திய அமைச்சர்களின் கடந்த 2 ஆண்டுகள் செயல்பாடு குறித்து பிரதமர் மோடி சமீபத்தில் ஆய்வு நடத்தினார். மேலும் அடுத்த ஆண்டு உத்தரபிரதேச மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதால், அமைச்சரவையில் மாற்றம் செய்ய பிரதமர் மோடி, பா.ஜனதா தலைவர் அமித்ஷா ஆகியோர் முடிவு செய்துள்ளனர்.

பிரதமர் மோடி ஜூலை 7-ஆம் தேதி ஆப்பிரிக்க நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். எனவே அதற்கு முன்பாக அமைச்சரவையை மாற்றி அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அனேகமாக நாளை அதாவது ஜூலை 5-ல் மத்திய அமைச்சரவை மாற்றியமைக்கப்படவுள்ளதாகவும் மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மந்திரிசபை மாற்றம் செய்யப்படுவதையொட்டி புதிய அமைச்சர்கள் பதவி ஏற்பு விழாவுக்காக ஜனாதிபதி மாளிகையை அலங்கரிக்கு பணிகள் தொடங்கியுள்ளன. மத்திய அரசு வட்டாரங்கள் இன்று வெளியிட்ட தகவலின்படி நாளை காலை 11 மணிக்கு ஜனாதிபதி மாளிகையில் உள்ள அசோகா ஹாலில் புதிய மந்திரிகளின் பதவி ஏற்பு விழா நடைபெறுகிறது.

மத்திய விளையாட்டுத்துறை மந்திரியாக பொறுப்பேற்றிருந்த சர்பானந்தா சோனோவால் அந்த பதவியை ராஜினாமா செய்துவிட்டு அசாம் மாநிலத்தின் முதல் மந்திரியாக சமீபத்தில் பதவி ஏற்றுகொண்டார். இந்த பதவிக்கு புதிய அமைச்சரும், உத்தரப்பிரதேசம், அசாம் மாநிலங்களைச் சேர்ந்தவ சிலர் அமைச்சராகவும் பதவியேற்பார்கள் என்றும் கூறப்படுகிறது. மேலும் 75 வயதை கடந்தவர்கள் அமைச்சரவையில் இருந்து நீக்கப்படலாம் என்றும் தெரிய வருகிறது. இதன்படி சிறுபான்மையினர் நலத்துறை மந்திரி நஜ்மா ஹெப்துல்லா பதவி விலக வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் இருந்து புதிய மந்திரிகள் பதவியேற்க வாய்ப்பில்லை என்றும் கூறப்படுகிறது.

Leave a Reply