சென்னை நகரில் ரூ.3,267 கோடி செலவில் மோனோ ரயில் திட்டத்தைச் செயல்படுத்த மத்திய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சகம் நேற்று ஒப்புதல் அளித்துள்ளது. இதனால் சென்னையில் மோனோ ரயில் பணிகள் தீவிரமடையும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
சென்னையில் பூந்தமல்லி – கத்திப்பாரா இடையே மற்றும் போரூரில் இருந்து வடபழனி வரை உள்ள 20.68 கி.மீ. தூரத்துக்கு மோனோ ரயில் திட்டம் அமைக்க ஊரக வளர்ச்சித் துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.
சென்னை நகரின் போக்குவரத்து நெருக்கடியை போக்க இந்த மோனோ ரயில் திட்டம் பெரிதும் உதவும் என பொதுமக்கள் கருத்து தெரிவித்தனர்.