சென்னை சென்ட்ரல் டவர், ஓட்டல் அவுரா காலி. மெட்ரோ ரயில் நிர்வாகம் அதிரடி.

7சென்னை சென்ட்ரல் அருகே உள்ள சென்ட்ரல் டவர்ஸ், ஓட்டல் அவுரா ஆகிய கட்டிடங்களை மெட்ரோ ரயில் நிறுவனம் நேற்று முன் தினம் கையகப்படுத்தியது. சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை அடுத்து இந்த இடங்கள் கைப்பற்றப்பட்டதாக மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.

சென்னை சென்ட்ரல் அருகே, அரசுக்குச் சொந்தமான இடத்தில் சென்ட்ரல் டவர்ஸ் உணவகமும், அவுரா உணவகமும் குத்தகைக்கு எடுக்கப்பட்டு இயங்கி வந்தன.மெட்ரோ ரயில் நிலையத்துக்காக இந்த இடங்கள் தேவைப்படுகின்றன என்று தமிழக அரசுக்கு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் கோரிக்கை விடுத்தது.

மெட்ரோ நிறுவனத்தின் கோரிக்கைக்கு தமிழக அரசு அனுமதி அளித்து இரண்டு இடங்களிலும் குத்தகைக்கு உள்ளவர்கள் உடனடியாக காலி செய்யும்படி அரசு உத்தரவு விடுத்தது..ஆனால் அரசு உத்தரவை எதிர்த்து இரண்டு கட்டிடங்களின் நிர்வாகத்தினர்களும் சென்னை ஐகோர்ட்டில் வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்கு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்துக்கு சாதகமாக தீர்ப்பளிக்கப்பட்டது.

ஐகோர்ட் உத்தரவை எதிர்த்து இரண்டு கட்டிடங்களின் நிர்வாகத்தினர்களும் உச்ச நீதிமன்றத்தில் அப்பீல் செய்தனர். ஆனாலும் உச்சநீதிமன்றத்திலும் ஐகோர்ட் தீர்ப்பே இறுதி செய்யப்பட்டதால் இரண்டு கட்டிடங்களையும் உடனடியாக காலி செய்யும்படி மெட்ரோ ரயில் நிறுவனம் கட்டிட உரிமையாளர்களை கேட்டுக்கொண்டது. ஆனால் கட்டிட இரண்டு உணவக உரிமையாளர்களும் இடங்களை காலி செய்யாததால் அந்த இடங்களை கையகப்படுத்தும் நடவடிக் கையை நேற்று முன் தினம் மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் மேற்கொண்டனர்.

போலீஸ் பாதுகாப்புடன் இரண்டு கட்டிடங்களிலும் இருந்த பொருட்கள் அப்புறப்படுத்தப்பட்டன. இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Leave a Reply