மாணவர்களின் போராட்டத்திற்கு முழுவெற்றி. 2 அறிவிப்புகளை வாபஸ் பெற்றது மத்திய அரசு

மாணவர்களின் போராட்டத்திற்கு முழுவெற்றி. 2 அறிவிப்புகளை வாபஸ் பெற்றது மத்திய அரசு

தமிழ் உணர்வுகள் உள்ள இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் எழுச்சி போராட்டம் காரணமாக ஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டம் கொண்டு வரப்பட்டது.

இந்த மசோதா நேற்று தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில், ஜல்லிக்கட்டு குறித்து 2011 மற்றும் 2016ஆம் ஆண்டுகளில் கொண்டு வரப்பட்ட 2 அறிவிப்புகளை திரும்ப பெற்றுக்கொள்வதாக மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் சற்று முன் தெரிவித்துள்ளது.

வாபஸ் குறித்த மனு நாளை தாக்கல் செய்யப்படும் என சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கடந்த 2011ல் காட்சிபடுத்தப்படும் விலங்குகளை தடை செய்யும் பட்டியலில் காளைகள் சேர்க்கப்பட்டது. 2016ல் அந்த பட்டியலில் இருந்து காளைகளுக்கு விலக்கு அளித்து ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த இரண்டு அறிவிப்புகளையும் தான், மத்திய அரசு தற்போது வாபஸ் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply