பெண்கள் படுக்கைக்கு மட்டுமே சரியானவர்கள்: 73 வயது நடிகருக்கு இது தேவையா?

பெண்கள் படுக்கைக்கு மட்டுமே சரியானவர்கள்: 73 வயது நடிகருக்கு இது தேவையா?

பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜூனா தயாரிக்கும் படம் ஒன்றில் அவரது மகன் நாகசைதன்யா நடிக்கவுள்ளார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ராகுல் ப்ரித்திசிங் நடிக்கின்றார். இந்த படத்தின் தொடக்கவிழா நேற்று ஐதராபாத்தில் நடந்தது. தயாரிப்பாளர் நாகார்ஜூனா, தெலுங்கு திரையுலகின் சீனியர் நடிகர் சலபதிராவ் என்பவரை சிறப்பு விருந்தினராக அழைத்திருந்தார்.

சலபதிராவ் இந்த படத்தின் விழாவில் கலந்து கொண்டு அனைவரையும் பாராட்டி இரண்டொரு வார்த்தைகள் பேசிவிட்டு சென்றிருக்கலாம். ஆனால் அவர் பேசியபோது, ‘பெண்களால் மன அமைதி கெடும் என்று இந்த படத்தில் நாக சைதன்யா வசனம் பேசியுள்ளார். அது உண்மையா என்று எனக்கு தெரியாது. ஆனால் பெண்கள் படுக்கைக்கு தான் மிகச் சரியானவர்கள் என்று சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்தார்.

இந்த பேச்சு நாகார்ஜூனா உள்பட அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அவசர அவசரமாக நாகார்ஜூனா தனது டுவிட்டரில் சலபதிராவ் பேச்சில் எனக்கு உடன்பாடு கிடையாது. நான் பெண்களை மதிக்கும் குணம் கொண்டவன் என்று கூறி சமாளித்தார். சலபதிராவின் இந்த பேச்சுக்கு கடும் கண்டனங்கள் எழுந்ததை அடுத்து அவர் வருத்தம் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply