சாம்பியன் லீக் கிரிக்கெட் போட்டி அடியோடு ரத்து? கிரிக்கெட் ரசிகர்கள் ஏமாற்றம்

championஐ.பி.எல் போட்டி அளவுக்கு சாம்பியன் லீக் போட்டிக்கு ஆதரவு இல்லாததால் இந்த போட்டி ரத்து செய்யப்படும் என தெரிகிறது. ஐ.பி.எல் போட்டிக்கு இணையாக ஆரம்பத்தில் பேசப்பட்ட சாம்பியன் லீக் போட்டிக்கு வர வர ரசிகர்களிடையே ஆதரவு குறைந்து வருவதாகவும், இந்த ஆண்டுக்கான 7வது சாம்பியன் ‘லீக்’ போட்டி குறித்து இதுவரை எந்தவித அறிவிப்பு வராததால் இந்த போட்டியை ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

கடந்த 2009ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட சாம்பியன் லீக் கிரிக்கெட் போட்டியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ) ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் வாரியங்கள் இணைந்து நடத்தி வந்தன. இதுவரை நடந்த 6 போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் தலா 2 முறை கோப்பையை வென்றுள்ளன. நியூசவுத் வேல்ஸ், சிட்னி சிக்சர்ஸ் அணிகள் தலா 1 முறை சாம்பியன் பட்டம் பெற்றன.

இந்தப்போட்டியை அடியோடு ரத்து செய்ய பிசிசிஐ உள்பட ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியங்களும் முடிவு செய்துள்ளதால் இந்த போட்டி இவ்வாண்டு நடப்பது சந்தேகம் என்றே கூறப்படுகிறது. இந்த போட்டி ரத்து ஆவதாக வந்த செய்தியை அடுத்து கிரிக்கெட் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

Leave a Reply