சென்னா பாலக்

fe95f0de-167e-4a4e-acbe-afedab82ea59_S_secvpf

தேவையான பொருட்கள்:  

வெள்ளை கொண்டைக்கடலை – அரை கப்,
பாலக்கீரை – ஒரு சிறிய கட்டு,
வெங்காயம் – 2,
தக்காளி – ஒன்று,
இஞ்சி – பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன்,
பச்சை மிளகாய் – ஒன்று,
மிளகாய்த்தூள், சீரகத்தூள், தனியாத்தூள், கரம்மசாலாத்தூள் – தலா கால் டீஸ்பூன்,
கஸ்தூரி மேத்தி (உலர்ந்த வெந்தயக்கீரை) – ஒரு சிட்டிகை,
சர்க்கரை, சீரகம் – தலா கால் டீஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு,
எண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன்.

செய்முறை:

• வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

• தக்காளியை நன்றாக அரைத்து கொள்ளவும்.

• கொண்டைக் கடலையை 8 மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து, குக்கரில் 5 விசில் வரும் வரை வேகவைத்துக் கொள்ளவும்.

• பாலக்கீரையை நன்கு சுத்தம் செய்து சிறிதளவு தண்ணீர் மற்றும் சர்க்கரை சேர்த்து ஒரு நிமிடம் கொதிக்கும் நீரில் போட்டு எடுக்கவும்.

• பச்சை மிளகாயுடன் கீரையைச் சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.

• கடாயில் எண்ணெய் விட்டு, சீரகம் தாளித்து, இஞ்சி – பூண்டு விழுது, பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

• தக்காளியை விழுதாக அரைத்து சேர்த்து… உப்பு, மிளகாய்த்தூள், தனியாத்தூள், சீரகத்தூள் மற்றும் கரம்மசாலாத்தூள் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். • பிறகு, அரைத்த கீரை விழுதை சேர்க்கவும். இதனுடன் வெந்த கொண்டைக்கடலையை சேர்க்கவும் (தேவைப்பட்டால் தண்ணீர் சேர்க்கலாம்).

• இதனை 5 நிமிடம் கொதிக்கவிட்டு, கஸ்தூரி மேத்தி சேர்த்துக் கிளறி இறக்கிப் பரிமாறவும்.

Leave a Reply