ஐசிஐசிஐ வங்கிக்கு புதிய தலைவர் நியமனம்

ஐசிஐசிஐ வங்கிக்கு புதிய தலைவர் நியமனம்

ஐசிஐசிஐ வங்கி தலைவா் சந்தா கோச்சார் மீது முறைகேடு புகார் எழுந்ததை அடுத்து அந்த வங்கியின் புதியத் தலைவராக சந்தீப் பாக்ஷி என்பவர் நேற்று நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 2012ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஐசிஐசிஐ வங்கி தலைமையிலான 20 வங்கிகள் கூட்டமைப்பு வீடியோகான் நிறுவனத்துக்கு ரூ.3,250 கோடி கடன் வழங்கியது. வீடியோகான் பெற்ற கடனில் ஏறக்குறைய இன்னும் ரூ.2800 கோடிக்கு மேல் திருப்பிச் செலுத்தப்படவில்லை. இந்த நிலையில், வழங்கப்பட்ட ரூ.3250 கோடி கடனும் வாராக்கடனாக அறிவிக்கப்பட்ட வேண்டிய நிலை ஏற்பட்டது.

இதனையடுத்து, வீடியோகான் நிறுவனத்துக்கு கடன் வழங்கியதில் ஊழல் நடைபெற்றுள்ளதாக எழுந்த குற்றச்சாட்டினை அடுத்து ஐசிஐசிஐ வங்கி தலைவா் சந்தா கோச்சார் மீது விசாரணை நடத்த குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு விசாரணை நடத்தி முடிக்கும் வரை சந்தா கோச்சார் தலைவா் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுவதாக வங்கி நிர்வாகம் அறிவித்துள்ளது.

இந்த நிலையில் புதிய தலைவராக சந்தீப் பாக்ஷி என்பவர் தற்காலிக மற்றும் முழுநேர தலைவராக செயல்படுவார் என்று வங்கி நிர்வாகம் அறிவித்துள்ளது. சந்தீப் பாக்ஷி இதற்கு முன்னா் வங்கியின் இயக்குனராக பொறுப்பு வகித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply