கூகுளில் வேலை என மோசடி: மனமுடைந்த மாணவரின் அவலநிலை

கூகுளில் வேலை என மோசடி: மனமுடைந்த மாணவரின் அவலநிலை

சண்டிகர் மாநில பள்ளி மாணவர் ஹர்ஷித் சர்மாவுக்கு கூகுளில் வேலை தருவதாக வந்த செய்தி போலி என்று தெரிந்ததும் அந்த மாணவர் மனமுடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சண்டிகரைச் சேர்ந்த 16 வயது இளைஞர் ஹர்ஷத் சர்மா. அரசு பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்துவரும் அவருக்கு கூகுள் நிறுவனத்தில் ரூ.1.44 கோடி ஆண்டுச் சம்பளத்தில் கிராபிக் டிசைனிர் வேலை அளிப்பதாக மின்னஞ்சல் ஒன்று வந்திருக்கிறது. இதற்காக நடத்தப்பட்ட ஆன்லைன் நேர்முகத் தேர்விலும் வெற்றி பெற்றுள்ளார்.

அவருக்கு கூகுள் நிறுவனத்தில் வேலை கிடைத்திருப்பதாக அவர் படிக்கும் பள்ளிக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டதும் இச்செய்தி ஊடகங்ளில் வெளியானது. பின்னர், ஹர்ஷத்க்கு வந்த அழைப்பு பொய்யானது என்று தெரிந்துள்ளது.

இதனால், கடந்த செவ்வாய்க்கிழமை முதல் சாப்பிடாமல் பட்டினி கிடந்துள்ள ஹர்ஷத் உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மோசடி அழைப்பை நம்பி ஏமாந்து மனமுடைந்த மாணவனின் நிலை மருத்தவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறும் அளவிற்கு மோசடைந்துள்ளது. இதனால், அந்த மாணவரின் குடும்பத்தினரும் நண்பர்களும் சோகத்தில் மூழ்கியுள்ளனர்

Leave a Reply