ஜெயலலிதா, கருணாநிதியுடன் சந்திரபாபு நாயுடு சந்திப்பு.

ஒன்றுபட்ட ஆந்திர மாநிலத்துக்கு ஆதரவு அளிக்க வேண்டுமென ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு நேற்று தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதாவை சந்தித்து கேட்டுக்கொண்டார்.

சென்னை போயஸ் தோட்ட வீட்டில் ஜெயலலிதாவை சந்தித்த சந்திரபாபு நாயுடு, காங்கிரஸ் கட்சி மக்களின் விருப்பத்திற்கு இணங்க, சட்டமன்றத்தின் ஒப்புதலை பெறாமல் அராஜமாக செயல்படுகிறது என்றும், ஆந்திர மக்களின் தெலுங்கானா எதிர்ப்பு போராட்டத்திற்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் ஜெயலலிதாவிடம் சந்திரபாபு நாயுடு கேட்டுக்கொண்டார். ஏற்கனவே இதே கோரிக்கைக்காக ஜெகன்மோகன் ரெட்டியும் சில நாட்களுக்கு முன் ஜெயலலிதாவை சந்தித்து இருந்தார்.

ஜெயலலிதாவை சந்தித்த பின்னர் திமுக தலைவர் கருணாநிதியின் இல்லத்திற்கு சென்ற சந்திரபாபு நாயுடு, அவரிடம் இதே கோரிக்கையை தெரிவித்து, ஆதரவு கேட்டார். இரண்டு தமிழக தலைவர்களும் தனது கோரிக்கைக்கு ஆதரவு அளிப்பார்கள் என தான் நம்புவதாக செய்தியாளர்களிடம் சந்திரபாபு நாயுடு கூறினார்.

Leave a Reply