சந்திர பகவானுக்கு உகந்த விரத நாட்கள்

download (5)

சந்திரனுக்கு உரிய நாள் திங்கட்கிழமை. அன்று விரதம் இருந்து வெள்ளை ஆடை அணிந்து, சந்திர பகவானுக்கும் வெள்ளை ஆடை அணிவித்து வழிபட வேண்டும். பாலன்னம், தயிரன்னம் இவற்றை நைவேத்தியம் செய்து, அதனைப் பிறருக்குத் தானம் அளித்து வழிபட வேண்டும்.

பச்சரிசியும், வெல்லமும் கலந்து சந்திரபகவானுக்குப் பூஜை செய்து குழந்தைகளுக்கு அளிக்கலாம். சந்திர பகவானை அசாவேரி ராகத்தில் சந்திர கீர்த்தனைகளைப் பாடிப் பிரார்த்தனை செய்ய வேண்டும். கார்த்திகை மாதம் திங்கட்கிழமை விரதம் இருந்தும், சித்ரா பவுர்ணமி அன்று விரதம் இருந்து சந்திர பகவானை வழிபடுவது அதிக பலன்களைத் தரும்.

கோபம், பொறாமை, அமைதியின்மை உறவுக்குள் ஏற்படும் சண்டை, அப்பா-மகன் சண்டை, கணவன் – மனைவி சண்டை இவைகளுக்கு எல்லாம் இங்கு சந்திர பகவானைப் பூஜை செய்து மனதார வேண்டிக் கொண்டால் சரியாகி விடும்

Leave a Reply