தேமுதிக அறக்கட்டளையில் என்ன நடக்கின்றது? மர்மத்தை போட்டு உடைக்கும் சந்திரகுமார்

தேமுதிக அறக்கட்டளையில் என்ன நடக்கின்றது? மர்மத்தை போட்டு உடைக்கும் சந்திரகுமார்

dmdkதேமுதிகவில் இருந்து கிட்டத்தட்ட அனைத்து மாவட்ட செயலாளர்களும் திமுகவில் இணையும் முடிவுக்கு வந்துவிட்டனர். இதனால் விஜயகாந்த் முந்திக்கொண்டு மாவட்ட செயலாளர்களை நீக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளார். கிட்டத்தட்ட தேமுதிக கூடாரமே காலியாகவுள்ள நிலையிலும் விஜயகாந்த் மனம் தளரவில்லை என்றும் அதற்கு காரணம் கடந்த தேர்தலில் கட்சியும் அவரும் தோல்வி அடைந்தாலும் தனிப்பட்ட முறையில் விஜயகாந்த் குடும்பத்தினர் பொருளாதார ரீதியில் மிகப்பெரிய வெற்றியை அடைந்துள்ளனர் என்றும் தேமுதிகவில் இருந்து பிரிந்து மக்கள் தேமுதிக கட்சியை ஆரம்பித்துள்ள சந்திரகுமார் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் தேமுதிக அறக்கட்டளை குறித்தும் அவர் பல்வேறு குற்றச்சாட்டுக்களை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: தே.மு.தி.க பெயரில் இயங்கிவரும் அறக்கட்டளையில் விஜயகாந்த், பிரேமலதா, சுதீஷ் உள்ளிட்ட மூவர் மட்டுமே டிரஸ்டிகளாக இருக்கிறார்கள். அதில் நடந்திருக்கும் பரிமாற்றம் எங்கள் யாருக்குமே தெரியாது. இப்படி இருக்கும் சூழ்நிலையில் மாநிலம் முழுக்க இருக்கும் தே.மு.தி.க நிர்வாகிகளுக்கு ஒரு கடிதம் போய் இருக்கிறது. அதில் விஜயகாந்த் செய்த குளறுபடிகள், தவறுகள் எல்லாம் சுட்டிக்காட்டப்பட்டு இருக்கின்றன. அதில்தான் அறக்கட்டளை தொடர்பான புகாரும் இருந்தது. எனக்கும் அந்தக் கடிதம் வந்தது. அதைவைத்தது விசாரித்தபோதுதான், அறக்கட்டளையில் செய்திருக்கும் முறைகேடுகள் எங்களுக்குத் தெரிந்தது. கட்சிக்காக வசூலித்த பணம், பல கோடி ரூபாய் நன்கொடை எல்லா வற்றையும் தே.மு.தி.க அறக்கட்டளை என்கிற பெயரில் வாங்கி இருக்கிறார்கள்.

ஆனால், அதில் எங்கள் யாரையும் நிர்வாகிகளாக நியமிக்கவில்லை. தனிநபர் அறக்கட்டளை என்றால், அதை ஏன் கட்சி பெயரில் நடத்த வேண்டும்? முதலில் தே.மு.தி.க தனிநபர் அறக்கட்டளையா அல்லது கட்சிக்கான அறக்கட்டளையா என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும். இந்த விவகாரத்தில் நீதிமன்றத்தை நாட இருக்கிறோம்’ என்று கூறியுள்ளார். இவருடைய பேட்டியால் தேமுதிக வட்டாரம் பரபரப்பாகி உள்ளது.

Leave a Reply