மனதுக்காரகன் என்று போற்றப்படும் சந்திரன் ராசிக்கு எட்டிற்க்கு வரும்பொழுது சந்திராஷ்டமம் என்று அழைக்கிறோம். உனக்கு இன்று சந்திராஷ்டம் என்று சொன்னால் ஆன்மீகத்தை நம்பாதவர்களும் பயம்கொள்கிறார்கள். சந்தினை வைத்து தான் தினப்பலனை கணிக்கப்படுகிறது.
ஒரு கோச்சார பலனுக்கு அப்படி ஒரு சக்தியா என்று நாம் ஒரு சமயத்தில் நினைத்து பார்க்கலாம். உண்மையில் சந்திரன் எட்டிற்க்கு வரும்பொழுது பயம்கொள்ள தான் வேண்டும். அன்றைய நாளில் பிரச்சினை எங்கிருந்தாவது நமக்கு வந்து விடும். ஏதோ ஒரு அசம்பாவிதம் நடைபெறும். சந்திரன் வழியாக தான் அதிகப்பட்ச கிரகங்கள் நமக்கு பலனை தருகிறது.
சந்திரன் மறையும்பொழுது நமக்கு கிரகங்களின் நல்ல பலன் கிடைப்பதில்லை. அதனால் நமக்கு பிரச்சினை ஏற்படுகிறது. சந்திராஷ்டம தினத்தில் பல பிரச்சினை ஏற்படும். ஒரு சிலருக்கு சந்திராஷ்டம தினத்தில் மரணம் கூட ஏற்பட வாய்ப்பு உண்டு. உங்களின் ஜாதகத்தில் ஒவ்வொரு மாதத்திலும் எந்த நாளில் அதிக பிரச்சினையை ஏற்படுத்தியது என்று குறித்துக்கொண்டு வந்தால் அது சந்திராஷ்டம நாளாக இருக்கும்.
சந்திராஷ்டமத்திற்கு பல பரிகாரங்கள் இருந்தாலும் இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள் கண்டிப்பாக அந்த நாள் உங்களுக்கு மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் நாளாக இருக்கும். உங்களுக்கு சந்திராஷ்டம் வரும் நாறில் ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலையை சாத்தி வழிப்பட்டுவிட்டு வாருங்கள். பிரச்சனைகள் படிப்படியாக மறைவதை காணலாம்.