இனிமேயர் தேர்தல் இல்லை. திமுக எதிர்ப்பை மீறி சட்டசபையில் சட்டதிருத்தம்.
சென்னை உள்பட தமிழக மாநகராட்சிகளுக்கு மேயர் தேர்தல் கடந்த 1996ஆம் ஆண்டு நடைபெற்றபோது சென்னை மேயர் தேர்தலில் மு.க.ஸ்டாலின் வெற்றி பெற்று மேயராக பதவியேற்றார். பின்னர் மா.சுப்பிரமணியன், சைதை துரைச்சாமி ஆகியோர் சென்னை மேயராக தேர்வு செய்யப்பட்டனர். இந்நிலையில் மேயரை மக்கள் வாக்களித்து தேர்வு செய்யப்பட்டு வரும் நிலையில் தமிழகம் முழுவதும் மாநகராட்சி மேயரைத் தேர்வு செய்வதில் மாற்றம் கொண்டுவரும் வகையில் மாநகராட்சி சட்ட திருத்த முன்வடிவு, இன்று தமிழக சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டு குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. இதன்படி இனிமேல் மேயரை மக்கள் தேர்வு செய்ய மாட்டார்கள். மாமன்ற உறுப்பினர்களே மறைமுக வாக்கெடுப்பு மூலம் தேர்வு செய்வார்கள்
இந்த சட்டமுன்வடிவுக்கு ஆரம்ப நிலையிலேயே தி.மு.க. எதிர்ப்புத் தெரிவிப்பதாக சைதை தொகுதி எம்.எல்.ஏ. மா.சுப்ரமணியன் பேசினார். ஆனால், குரல் வாக்கெடுப்பு மூலம் சட்ட முன்வடிவைத் தாக்கல் செய்ய சபாநாயகர் தனபால் அனுமதித்தார்.
இதையடுத்து சட்ட முன்வடிவு அவையில் தாக்கல் செய்யப்பட்டு, குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியதாக சபாநாயகர் அறிவித்தார். இந்த சட்ட திருத்தத்துக்கு பேரவையில் நாளை ஒப்புதல் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், மாற்றுக் கட்சியைச் சேர்ந்த மேயருக்கு மாமன்ற உறுப்பினர்கள் போதிய ஒத்துழைப்பு தருவதில்லை. இதனால் உறுப்பினர்கள் ஒத்துழைப்பின்றி மாநகராட்சி பணிகள் மேற்கொள்வதில் சிரமம் ஏற்படுவதாக தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.