சேனல் 4 வெளியிட்ட திடுக்கிடும் ஆதாரம். சிங்கள வீரர்களின் வெறியாட்டம் அம்பலம்.

new videoஇலங்கையில் விடுதலைப்புலிகளுடனான இறுதிப்போரில் சிங்கள் ராணுவ வீரர்களின் வெறியாட்ட வீடியோ ஒன்றை சேனல் 4 நேற்று வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவில் கொல்லப்பட்ட பெண் விடுதலைப்புலிகளை சிங்கள வீரர்கள் பாலியல் பலாத்காரம் செய்யும் கொடுமையான காட்சிகள் பதிவாகியுள்ளது. மேலும் இறந்த பெண் போராளிகளை கேலி செய்தும், கூச்சலிட்டும் ஆடிப்பாடுவதும் அந்த விடியோவில் பதிவாகியுள்ளது.

Untitledஇந்த வீடியோ ஒரிஜினல்தான் என்று பிரபல தடவியல் நிபுணர் கலாநிதி ர்ச்சர்ட் சோதனைக்கு பிறகு உறுதி செய்துள்ளார். மேலும் அந்த வீடியோவில் காணப்படும் பெண் போராளின் உடலில் இருந்த காயங்கள் யாவும் இறந்த பின்னர் சிங்கள் வீரர்கள் ஏற்படுத்தியது என்றும், போரின்போது ஏற்பட்ட காயங்கள் இல்லை என்றும் அதிர்ச்சியாக தகவலையும் கூறுகின்றார்.

ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் அமெரிக்கா இலங்கைக்கு எதிராக தீர்மானம் கொண்டுவரப்பட உள்ள நிலையில் இப்படி ஒரு வீடியோ வெளியாகியிருப்பது மேலும் அதிர்ச்சியை கூட்டுகிறது.

 

Leave a Reply