யூஎஸ்பி வழியாக சார்ஜ் ஆகும் ஜீப்ரானிக்ஸின் புதிய பவர் கிரிப்

ZEB_U2_4PS_and_Plu_2448727f

சார்ஜர் இல்லாமல் மொபைல் போன், டேப்லட்டை நேரடியாக USB போர்ட்டுகளிலிருந்து சார்ஜ் செய்யும் வகையில் புதிய பவர் ஸாக்கெட்டை ஜீப்ரானிக்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

ஸ்மார்ட் போன்களின் பேட்டரிகள் பெரும்பாலும் நீண்ட நேரம் தாக்குப் பிடிப்பதில்லை. இதனால் அடிக்கடி போன்களை சார்ஜ் செய்ய வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதை கருத்தில் கொண்டு மேம்படுத்தப்பட்ட 2 ஆம்பியர் USB போர்ட்டுகளுடன் கூடிய புதிய தலைமுறை பவர் ஸ்ட்ரிப்புகளை ஜீப்ரானிக்ஸ் அறிமுகம் செய்துள்ளது.

இதனால் பவர் அடாப்டர் (சார்ஜர்) இல்லாமல் எந்த ஒரு மொபைல் போன்/டேப்லட்டை பவர் ஸ்ட்ரிப்பில் உள்ள USB போர்ட்டிலிருந்து நேரடியாக சார்ஜ் செய்துகொள்ளலாம்.

இதில் இரண்டு போர்ட்டுகளும் சேர்ந்து 2A அளவை கொண்டுள்ளன. மொபைல் போன்கள் மற்றும் டேப்லட் போன்ற உங்கள் USB சாதனங்களை USB போர்ட் வழியாக நேரடியாக சார்ஜ் செய்து கொள்ளலாம். இதனை 3G wifi டாங்கில்ஸ், LED விளக்குகள், மின்விசிறி போன்றவற்றிற்கும் பயன்படுத்தலாம்.

பவர் கிரிப் 4, 5 மற்றும் 6 சாக்கெட் கீழ் 3 மாடல்கள் உள்ளன. இந்த புதிய மாடல்கள் 4 சாக்கெட்டுகள் மற்றும் 2A அளவு கொண்ட 2 USB போர்ட்டுகளுடன் வருகின்றன. இது கறுப்பு மற்றும் வெள்ளை நிறங்களில் கிடைக்கிறது. கறுப்பு நிற மாடல் 3M நீளமுள்ள கேபிளுடனும் வெள்ளை நிற மாடல் 2M நீளமுள்ள கேபிளுடனும் வருகின்றன.

USB போர்ட்டுடன் கூடிய பவர் கிரிப் வரிசை ரூபாய் 729/- முதல் கிடைக்கிறது. இது ஜீப்ரானிக்ஸின் 1 வருட வாரன்டியுடன் வருகிறது.

கூடுதல் விவரங்களுக்கு – www.zebronics.com | www.facebook.com/zebronics

Leave a Reply