உலகப்புகழ் பெற்ற இந்திய கட்டிடக்கலைஞர் காலமானார்.

charles correaகுஜராத்தில் உள்ள காந்தி நினைவகம், மத்திய பிரதேச சட்டமன்றம் உள்பட உலகின் பல பிரபலமான கட்டிடங்களை கட்டி இந்தியாவில் மட்டுமின்று உலக அளவில் பிரபலமான கட்டிடக்கலை நிபுணர் கட்டட சிற்பி சார்லஸ் கோரியா காலமானார். அவருக்கு வயது 86.

1930ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 1ஆம் தேதி செகந்திராபாத் நகரில் பிறந்த சார்லஸ் கோரியா பாம்பே பல்கலைகழகத்தில் உயர்கல்வி பயின்றார். பின்னர் மேற்படிப்புகளுக்காக மிக்சிகன் பல்கலைகழகத்துக்கும், கேம்பிரிட்ஜ் எம்.ஐ.டி பல்கலைகழகத்திலும் சென்று தனது மேற்படிப்புகளை தொடர்ந்தார்.

இந்தியாவில் முக்கியமான கட்டங்களையும், நகரங்களை வடிவமைத்த பெருமை இவருக்கு உண்டு.1958ம் ஆண்டு குஜராத்தில் காந்தியின் நினைவகத்தை இவர் வடிவமைத்தவுடன் தான் இவருடைய பெருமை உலகிற்கு தெரிய வந்தது. அதன்பின்னர் ஜவஹர் கலா கேந்த்ரா ஜெய்ப்பூர், பாரத் பவன் போபால், நேஷனல் கிராஃப்ட் மியூசியம் புதுடெல்லி போன்ற பல கட்டங்கள் இவரது திறமையால் உருவானவை. போர்ச்சுகலில் இவர் வடிவமைத்த சேம்பலிமாட் சென்டர் இவருடைய புகழ் உலகம் முழுவதும் பரவ காரணமாக இருந்தது.

கட்டிடங்களை மட்டும் கட்டி வந்த இவர் பின்னர் நகரங்களை வடிவமைப்பதிலும் வல்லமை மிக்கவராக மாறினார். இவரது கலையில் உருவானது தான் நவி மும்பையின் வடிவமைப்பு. கட்டடக்கலைக்காக பல விருதுகளை வாங்கி குவித்துள்ள சார்லஸ் கோரியா. இந்தியாவின் உயரிய விருதுகளான பத்மஸ்ரீ(1972) மற்றும் பத்ம பூஷன்(2006) ஆகிய விருதுகளையும் பெற்றார்.  

கடந்த அரை நூற்றாண்டுகளாக இந்தியாவிலும் சரி, உலக அளவிலும் சரி முக்கியமான கட்டடக்கலை நிபுணர்களில் தலைசிறந்து விளங்கிய சார்லஸ் கோரியா நேற்று (16.06.2015) காலமானார். உடல்நிலை சரியில்லாமல் இருந்த சார்லஸ் கோரியா நேற்று மறைந்தார். இதற்கு உலகின் பல கட்டடக்கலை நிபுணர்களும், இந்திய பிரதமரும் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

பிரதமர் மோடி தனது பிரதமர் ட்விட்டர் பக்கத்தில் இந்தியாவின் முக்கியமான கட்டடக்கலை நிபுணரின் மறைவுக்கு என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன் என ட்விட்டரில் தெரிவித்துள்ளார். இவர் மறைந்தாலும் இவரது கட்டங்கள் இன்றும் நாளைய தலைமுறைக்கு பாடமாகவும், இந்தியாவின் அடையாளமாகவும் இருக்கும் என பல கட்டடக்கலை பிரியர்கள் ட்விட்டரில் தங்கள் கருத்துக்களையும் இரங்கலையும் தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply