நோயாளியின் கட்டில் மேல் காலை வைத்து அவமாரியாதை செய்த ஐ.ஏ.எஸ். அதிகாரி.
சத்தீஷ்கர் மாநிலத்தில் பயிற்சி ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவர் நோயாளிகளிடம் அவமரியாதையாக நடந்து கொண்ட சம்பவம் சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அந்த அதிகாரிக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப சத்தீஷ்கர் முதல்வர் ராமன் சிங் உத்தரவிட்டுள்ளார்.
சத்தீஸ்கர் மாநிலத்தில் பயிற்சி பெற்று வரும் ஐஏஎஸ் அதிகாரியான ஜெகதீஷ் சோன்கர் என்பவர் ராமானுஜ் கஞ்ச் என்ற பகுதியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சென்று ஆய்வு செய்தார். அப்போது அவர் நோயாளிகளிடம் நலம் விசாரித்து வரும்போது அந்த அதிகாரி, தனது ஒரு காலை நோயாளியின் படுக்கை மேல் வைத்துக் கொண்டு நலம் விசாரித்தார். இதை அங்கிருந்த ஒரு நபர் புகைப்படம் எடுத்து தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்தார்.
இந்த விவகாரம் சமூக வலைத்தளங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், பயிற்சி காலத்தில் இருக்கும் ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கு நோட்டீஸ் அனுப்ப முதலமைச்சர் ராமன் சிங் உத்தரவிட்டுள்ளார். இதனால் அந்த மாநிலத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.