2013 – வேதியலுக்கான நோபல் பரிசு

2013ம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் கடந்த திங்கட்கிழமை முதல் அறிவிக்கப்பட்டு வருகிறது. இதுவரை மருத்துவம், இயற்பியலுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், வேதியலுக்கான நோபல் பரிசு நேற்று அறிவிக்கப்பட்டது.

இந்த பரிசு அமெரிக்காவில் உள்ள ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தை சேர்ந்த இங்கிலாந்து மற்றும் அமெரிக்க குடியுரிமை வைத்திருக்கும் மைக்கேல் லெவிட், ஸ்ட்ராஸ்போர்க் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அமெரிக்க ஆஸ்திரியரான மார்டின் கர்பிளஸ் மற்றும் தெற்கு கலிபோர்னியா பல்கலைக்கழகத்தை சேர்ந்த அமெரிக்க இஸ்ரேலியரான அரை வார்செல் ஆகியோருக்கு கிடைத்துள்ளது.

வேதியல் மாற்றங்கள் மின்னல் வேகத்தில் நடைபெறும். எலக்ட்ரான்கள் அணு மையப்பகுதியை நோக்கி பாய்ந்து வருவது வழக்கம். இவை கண்களுக்கு புலப்படாது. இந்த வேதியல் மாற்றங்களை கம்ப்யூட்டர்கள் புரிந்து கொள்ளும் வகையில் அவற்றை தயார்படுத்தியுள்ளனர். இது மருந்து தயாரிப்புக்கு  பயன்படுகிறது. இதற்காக இவர்களுக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply