வாஜ்பாய் அமைச்சரவையில் மத்திய அமைச்சராகவும், மதிமுகவின் முக்கிய தலைவராகவும் இருந்த செஞ்சி ராமச்சந்திரன் இன்று தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் முன்னிலையில் அதிமுகவில் தன்னை இணைத்துக்கொண்டார்.
வைகோ திமுகவில் இருந்து வெளியேறியவுடன் அவருக்கு உறுதுணையாக இருந்த ஒருசில முக்கிய தலைவர்களுள் செஞ்சி ராமச்சந்திரனும் ஒருவர். ஆனால் சில மாதங்களுக்கு முன்பு வைகோவுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக மதிமுகவில் இருந்து விலகி, திமுகவில் சேர்ந்தார். திமுகவில் அவரை யாரும் கண்டுகொள்ளாதால் விரக்தி அடைந்து தற்போது அதிமுகவில் சேர்ந்துவிட்டார்.
இன்று ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் சேர்ந்த செஞ்சி ராமச்சந்திரன், அதிமுகவின் வெற்றிக்கு பாடுபடப்போவதாகவும், முதல்வரின் கரத்தை வலுப்படுத்த உறுதுணையாக இருக்கபோவதாகவும் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.