அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் அதிமுக பொதுகுழு தொடங்கியது

அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் அதிமுக பொதுகுழு தொடங்கியது

அதிமுகவின் பொதுக்குழு நடைபெற எந்தவித தடையும் விதிக்க முடியாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில் இன்று சென்னையில் அதிமுகவின் பொதுக்குழு சற்றுமுன்னர் தொடங்கியுள்ளது.

இந்த பொதுக்குழுவில் அதிமுகவின் 95% நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ளதால் இந்த பொதுக்குழுவில் எடுக்கப்படும் முடிவுகள், இயற்றப்படும் தீர்மானங்கள் ஏற்றுக்கொள்ளும் வகையில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறடு.,

இந்த நிலையில் பொதுக்குழுவை நடத்தி தர அவைத்தலைவர் மதுசூதனன் பெயரை முதல்வர் எடப்பாடி முன்மொழிய, பெயரை திண்டுக்கல் சீனிவாசன் வழிமொழிந்தார். இதன்பின்னர் முறைப்படி பொதுக்குழுவை மதுசூதனன் தொடங்கி வைத்தார். இந்த பொதுகுழுவில் பல அதிரடி முடிவுகள் எடுக்கப்படும் என தெரிகிறது.

Leave a Reply