ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி தொடரில் நேற்று நடைபெற்ற இரண்டு போட்டிகளில் பெங்களூரு மற்றும் சென்னை அணிகள் வெற்றி பெற்றது. சென்னை அணி நேற்றைய போட்டியில் வெற்றி பெற்றதால் மீண்டும் முதலிடத்தை கைப்பற்றியுள்ளது.
நேற்று நடைபெற்ற முதல் ஆட்டத்தில் மும்பை மற்றும் பெங்களூர் அணிகள் மோதின. மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. தொடக்க ஆட்டக்காரரான கிறிஸ்ட் கெய்ல் நான்காவது ஓவரிலேயே விக்கெட்டை இழந்தபோதிலும் நேற்றைய போட்டியில் டிவில்லியர்ஸ் மற்றும் கேப்டன் விராத் கோஹ்லி ஆகியோர்களின் ஆட்டம் மிக அபாரமாக இருந்தது. டிவில்லியர்ஸ் 59 பந்துகளில் 133 ரன்கள் குவித்த்து கடைசி வரை ஆட்டம் இழக்காமல் இருந்தார். அவர் 19 பவுண்டரிகள் மற்றும் நான்கு சிக்சர்கள் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. விராத் கோஹ்லி 82 ரன்கள் அடித்தார். எனவே 20 ஓவர்களில் பெங்களூர் அணி 235 ரன்கள் குவித்தது.
236 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களமிறங்கிய மும்பை அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 196 ரன்கள் மட்டுமே எடுத்து 39 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
நேற்று நடைபெற்ற இரண்டாவது போட்டியில் சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதின. இந்த போட்டியில் சென்னை அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஸ்கோர் விபரம்:
சென்னை அணி: 157/5 20 ஓவர்கள்
ஸ்மித் 6
மெக்கல்லம் 81
ரெய்னா 3
டீபிளஸ்ஸிஸ் 29
நேஹி 2
தோனி 13
பிராவோ 15
உதிரிகள் 8
ராஜஸ்தான் அணி: 145/9 20 ஓவர்கள்
ரஹானே 23
வாட்சன் 28
ஸ்மித் 4
கே.கே.நாயர் 10
ஹூடா 15
சாம்சன் 26
ஃபால்க்னர் 16
மோரீஸ் 16
பாட்டியா 0
அங்கிட் சர்மா 0
தாம்பே 1
உதிரிகள் 6
ஆட்டநாயகன்: ஜடேஜா